

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிறைச்சாலிலையில், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை காவல்துறையினர் தாக்கும் விடியோ வைரலாகியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், அடியாலா சிறைச்சாலைக்குள் வைத்து, இம்ரான் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், சில சமூக வலைத்தளப் பக்கங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
சிறைச்சாலைக்கு இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை, காவல்துறையினர் தாக்கியிருப்பதாக பாகிஸ்தானின் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைச்சாலை வாயிலில் போராடினோம். எங்கள் சகோதரன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, பஞ்சாப் காவல்துறையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று சகோதரிகளில் ஒருவர் குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எனக்கு 71 வயதாகிறது, எனது தலை முடியைப் பிடித்து சாலையில் தரதரவென இழுத்துச் சென்று தரையில் தள்ளினார்கள். இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவரது ஆதரவாளர்களும் சிறை வாயிலில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். ஆனால், கடந்த ஒரு மாத காலத்தில், அவரை யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துளள்ன.
முன்னதாக, கைபர் - பக்துங்க்வா மாகாண முதல்வர், இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு, அஃப்ரிடியும் அவரை சந்திக்க தொடர்ந்து சென்றாலும் பார்க்க முடியவில்லை என்று செய்திகள் வெளியானதால், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களும் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.