உலகம்
இந்தோனேசியா: வெள்ளம், நிலச்சரிவுகளில் 49 போ் பலி!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 போ் உயிரிழந்தனா்; 67 போ் மாயமாகினா்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 49 போ் உயிரிழந்தனா்; 67 போ் மாயமாகினா்.
வெள்ளப் பெருக்கெடுத்துள்ள ஆறுகளிலும், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் உடல்களை மற்றும் உயிருடன் பிழைத்திருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
கடந்த வாரம் பெய்த பருவமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் செவ்வாய்கிழமை ஆறுகள் கரை உடைத்தன. வெள்ளம் மலைப்பகுதி கிராமங்களைத் தாக்கி அடித்துச் சென்றது. 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் நிலச்சரிவில் புதையுண்டன என்று தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.