எலான் மஸ்க்
எலான் மஸ்க்Center-Center-Delhi

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியானது. இதில் முதல் இடத்தில் எலான் மஸ்க்.
Published on

உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ், வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3,028 பணக்காரர்களை வரிசைப்படுத்தி வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.

3,028 உலக பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 16.1 டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், அமெரிக்கா 902 பணக்காரர்களுடன் முதல் இடத்திலும் 516 பணக்காரர்களுடன் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் 205 பணக்காரர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

முதல் இடத்தில் எலான் மஸ்க் (342 பில்லியன் டாலர்), 2ஆம் இடத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் (216 பில்லியன் டாலர்), 3வது இடத்தில் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (215 பில்லியன் டாலர்) சொத்து மதிப்புடன் இடம்பெற்றுள்ளனர்.

4வத இடத்தில் லாரி எலிசன், 5வது இடத்தில் பெர்நார்டு அர்னால்டு குடும்பமும், 6வதுஇடத்தில் வாரேன் பஃப்பெட், 7வது இடத்தில் லார்ரி பேஜ், 8வது இடத்தில் செர்கே பிரின், 9வது இடத்தில் அமான்சியோ ஒர்டேகா, 10வது இடத்தில் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com