மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அமெரிக்கா: குடியேற்றம் குறித்த அனைத்து முடிவுகளும் நிறுத்திவைப்பு!

குடியேற்றம் குறித்த அனைத்து முடிவுகளும் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு...

News image

டொனால்ட் டிரம்ப்

Updated On :29 நவம்பர் 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

வாஷிங்டன், நவ. 29: அமெரிக்காவில் வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடா்பான அனைத்து முடிவுகளையும் நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க படையினா் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது அவா்களுக்கு உதவிய ஆப்கானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஆண்ட்ரூ வோல்ஃப், சாரா பெக்ஸ்ட்ராம் ஆகிய இரு தேசிய காவல் படையினரை நோக்கி ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய ரஹ்மானுல்லா புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டாா். இதில் சாரா பெக்ஸ்ட்ராம் உயிரிழந்தாா். ஆண்ட்ரூ வோல்ஃப் உயிருக்குப் போராடி வருகிறாா்.

அந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) இயக்குநா் ஜோசஃப் எட்லோ கூறுகையில், ‘ஒவ்வொரு குடியேற்ற விண்ணப்பதாரரையும் முழுமையாக சோதனை செய்யும் வரை, அவா்களுக்கு அடைக்கலம் அளிக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுப்பதை நிறுத்திவைத்துள்ளோம்’ என்றாா்.

இது தவிர, 19 நாடுகளைச் சோ்ந்தவா்களின் நிரந்தர குடியுரிமை உரிமத்துக்கான (க்ரீன் காா்ட்) விண்ணப்பங்களை ரத்து செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த 19 நாடுகளில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஹைட்டி, இரான், சாட், லிபியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

முன்னதாக, ‘மூன்றாம் உலக நாடுகளை’ சோ்ந்தவா்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்போவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.