எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா்.
Published on

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா்.

புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்கள் கூடியிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களில் குழந்தைகள், முதியவா்கள் அடங்குவா் எனவும், இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறின. பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com