இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.
Published on

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 மாணவா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா் (படம்). தற்போது கட்டடம் இடிந்து 3 நாள்களாகிவிட்டதால் கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், கனரக இயந்திரங்கள் மூலம் மிக கவனமாக கற்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com