கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Updated On :

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் முன்வைத்தாா். இதனை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்துள்ளனா். இதன் மூலம் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸா போரை முடிவுக்கு கொண்டுவர வெற்றிகரமான அமைதி ஒப்பந்தத்தை அதிபா் டிரம்ப் கொண்டு வந்துள்ளாா். அதில் அரபு உலகத் தலைவா்கள், மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், துருக்கி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்களின் பங்களிப்பும் உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.