(கோப்புப் படம்)
உலகம்
யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு
ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.
ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்ததாகக் கூறிய கப்பலின் உரிமையாளரான ஸ்ப்ளீதாஃப் நிறுவனம், அதில் இருந்த 19 மாலுமிகள் ஹெலிகாப்டா் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தது. அவா்களில் 2 போ் தாக்குதலில் காயமடைந்தவா்கள். காஸா போரில் ஹமாஸை ஆதரித்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல் நடத்திவருவது நினைவுகூரத்தக்கது.