இந்தோனேசிய கட்டட விபத்து: 
மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசிய கட்டட விபத்து: மேலும் 3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
Published on

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து மேலும் 3 மாணவா்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இருந்தாலும், இடிபாடுகளிடையே இன்னும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கட்டடம் இடிந்து 3 நாள்களான நிலையில், கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்ற வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. இடிபாடுகளுக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், கனரக இயந்திரங்கள் மூலம் மிக கவனமாக கற்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com