வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம்..

News image
மியான்மரில் நிலநடுக்கம்
Updated On :3 அக்டோபர் 2025, 6:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி,

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அட்சரேகை 24.70 ஆகவும், நீளம் 94.89 ஆகவும், இதன் ஆழம் 90 கி.மீட்டரிலும் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானது.

முன்னதாக நேற்று அதிகாலை மியான்மரை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 97.61 நீளத்திலும், 60 கி.மீ. ஆழத்திலும் ஏற்பட்டது.

மிதமான நிலநடுக்கங்கள் ஆழமாக ஏற்படும் நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை. ஏனெனில் ஆழமற்ற நில அதிர்வுகளிலிருந்து ஏற்படும் நிலஅதிர்வு அலைகள் மேற்பரப்புக்குப் பயணிக்கக் குறுகிய தூரத்தைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக வலுவான நில அதிர்வு மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிகளவில் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடான மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

summary

A second earthquake struck Myanmar on Friday, which was recorded to be of magnitude 3.3, as reported by the National Centre for Seismology (NCS).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.