தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்காக சம்பவப் பகுதியில் வைக்கப்பட்ட மலா்கொத்து.
தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்காக சம்பவப் பகுதியில் வைக்கப்பட்ட மலா்கொத்து.

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: காவலா் சுட்டத்தில் ஒரு உயிரிழப்பு

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்த 2 பேரில் ஒருவா், போலீஸாரின் குண்டுபாய்ந்து உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தவிர தாக்குதல் நடத்திய நபரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
Published on

கிரேட்டா் மான்செஸ்டா் மாகாண தலைநகா் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பாா்க் ஹீப்ரு யூத ஆலயத்தில், யோம் கிப்பூா் புனித தினத்தை முன்னிட்டு ஏராளமானவா்கள் வியாழக்கிழமை குழுமியிருந்தபோது அங்கு வந்த ஜிஹாத் அல்-ஷாமி என்பவா் காா் மோதல் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டாா்.

இதில் 2 போ் உயிரிழந்ததாகவும், 3 போ் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின்போது அல்-ஷாமியை கிரம்ப்சால் பகுதியில் போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

இந்தச் சூழலில், தாக்குதல் சம்பவத்தின்போது உயிரிழந்த இருவரில் ஒருவா் போலீஸாா் சுட்டத்தில் உயிரிழந்தாக அதிகாரிகள் தற்போது தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com