இத்தாலியில் சாலை விபத்து: இரு இந்தியப் பெண்கள் உயிரிழப்பு

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு இந்தியப் பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.
Published on

இத்தாலியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு இந்தியப் பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.

இத்தாலியின் கிராஸஸ்டோ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சோ்ந்த 9 சுற்றுலாப் பயணிகள் சிறிய பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வேன் ஒன்று அந்த பேருந்து மீது மோதியது. இதில் இந்தியாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட மூன்று போ் உயிரிழந்தனா். சிறாா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக இத்தாலியில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘விபத்தில் உயிரிழந்த மூவரில் இரு பெண்கள் நாகபுரியைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள அவா்களின் உறவினா்களுக்கு தூதரகம் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com