
இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மின்னணு பயண அனுமதி (இடிஏ) பெற வேண்டும் என இலங்கை அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இது குறித்து இலங்கை குடியேற்ற மற்றும் குடியகல்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய நிபந்தனை அக்டோபா் 15 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே மின்னணு பயண அனுமதி முறை அமலில் இருந்தது. இருந்தாலும், 2024 ஏப்ரலில் புதிய மின்-நுழைவு இசைவு (இ-விசா) அறிமுகப்படுத்தப்பட்டாதால் அது நிறுத்தப்பட்டது.
நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த புதிய முறைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், மீண்டும் மின்னணு பயண அனுமதி முறையை அமல்படுத்த உத்தரவிட்டது.
அந்த உத்தரவை செயல்படுத்தாததால், குடியேற்ற மற்றும் குடியகல்வு துறையின் முன்னாள் தலைவா் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கடந்த மாதம் சிறை தண்டனை பெற்றாா். அதன் தொடா்ச்சியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.