சீனாவின் மேலும் ஒரு பொறியியல் அதிசயம்: உலகின் உயரமான பாலம்..!

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் 4,600 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள ஹுவாஜியாங்க் கிராண்ட் கேன்யான் பாலம் பற்றி...
சீனாவின் ஹுவாஜியாங்க் கேன்யான் பாலம்
சீனாவின் ஹுவாஜியாங்க் கேன்யான் பாலம்படம் | எக்ஸ் தளம்
Published on
Updated on
1 min read

சீனாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் 4,600 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள ஹுவாஜியாங்க் கிராண்ட் கேன்யான் பாலம் சீனாவின் பொறியியல் கட்டுமானத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துவிட்டது.

சீனாவில் குய்ஸௌ மாகாணத்தில் பெய்பான் ஆற்றுக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஹுவாஜியாங்க் பிரம்மாண்ட கேன்யான் பாலம் உலகின் மிக உயரமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக இப்போது திறக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான இந்தப் பாலத்தின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, அடுத்த 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருப்பது பொறியியல் சாமர்த்தியத்தின் உச்சம் எனலாம். இந்தப் பாலம் கடல் மட்டத்திலிருந்து 2,051 அடி உயரத்தில் 4,659 அடி நீளத்தை உடையதாக வடிவமைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

உலகளவில், சீனாவை தவிர்த்து பிற பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களைவிட உலகின் மிக உயரமான பாலம் என்ற சிறப்பையும் ஹுவாஜியாங்க் கிராண்ட் கேன்யான் பாலம்என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலோராடோவில் கடல் மட்டத்திலிருந்து 965 அடி உயரத்தில் அர்க்கன்சாஸ் ஆற்றின் மேலே அமைந்துள்ள தி ராயல் கார்ஜ் பாலத்தை(Royal Gorge Bridge in Colorado) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றுள்ளது சீனாவின் இந்த பொறியியல் அதிசயம்!

இதற்கு இன்னுமொரு கூடுதல் சிறப்பாக, மலைப்பாகங்கான பகுதிகளில் அமைந்துள்ள மிக நீளமான பாலம் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

இந்தப் பொறியியல் அசாத்தியத்தால், வழக்கமாக 2 மணி நேரம் வரை எடுக்கும் பயணநேரம் இப்போது வெறும் இரண்டே நிமிஷங்களுக்குள் முடிந்து விடுகிறது என்கின்றனர் கட்டுமான வடிவமைப்பாளர்கள்.

பாலத்தின் மேலே, வாகன ஓட்டிகளும் பயணிகளும் இளைப்பாறவும் சுவைத்து மகிழவும் உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. பாலத்தின் ஒரு புறத்தில் உள்ள பிரம்மாண்ட தூண் வடிவ நுழைவாயிலின் மேலே இந்த உணவகம் அமைந்துள்ளது (படத்தில் பச்சை நிற தூணுக்கு மேலே உள்ளது உணவகம்). பாலத்திலிருந்து பயணிகள் இங்கு செல்ல மின்தூக்கி வசதியும் உள்ளது. (அடேங்கப்பா..!)

சுமார் 2,600 அடி உயரத்தின் மேலே அமைக்கப்பட்ட உணவகத்தில் அமர்ந்து சூடாக ஒரு கப் காஃபி பருகுவதை நினைக்கும்போதே... அந்த உணர்வு அலாதி ஆனந்தமே!

பாலத்தில் செல்வோருக்காக உல்லாச பூங்கா ஒன்றும், கண்ணாடி பதியப்பட்டு காலுக்கு கீழே உள்ள இயற்கை காட்சிகளை உச்சியில் இருந்தபடியே ரசித்துக் கொண்டு கண்டுகளிக்கவும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பாலம் முடிவடையும் இடத்தில் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. பங்கி ஜம்ப்பிங் என்ற சாகச விளையாட்டிலும் இப்பாலத்திலிருந்து ஈடுபட வசதி உள்ளதாம். என்ன... இதெல்லாம் கனவா அல்ல நனவா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

Summary

China officially opens the world’s tallest bridge - The Huajiang Grand Canyon Bridge completing the project in under 4 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com