
கலிஃபோர்னியாவில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒன்று திங்கள்கிழமை(அக். 6) இரவு நெடுஞ்சாலையில் விழுந்து சேதமடைந்தது.
ரீச் நிறுவனத்தின் ‘ஏர் மெடிக்கல் சர்வீசஸ் (வான் வழி மருத்துவ சேவைகள்)’ ஏர்பஸ் எச்-130 ரக ஹெலிகாப்டர் ஒன்று, யூசி டேவிஸ் மருத்துவ மையத்திலிருந்து புறப்பட்டு வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் உள்ளிட்ட முழு விவரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ஒரு பெண்மணி உள்பட மொத்தம் 3 பேர் இருந்ததாகவும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் துரிதமாகச் செயல்பட்டு ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.