ஜப்பானின் முதல் பெண் பிரதமா்: டிரம்ப் வாழ்த்து

ஜப்பானின் முதல் பெண் பிரதமா்: டிரம்ப் வாழ்த்து

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு (64) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Published on

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு (64) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

முதல் முறையாக ஒரு பெண் பிரதமரை ஜப்பான் தோ்ந்தெடுத்துள்ளது. சிறந்த ஞானமும் மன வலிமையும் கொண்ட சனே தகாய்ச்சி அந்தப் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இது உன்னதமான ஜப்பான் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

அரசியல் நிதி முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவா் பொறுப்பில் இருந்து பிரதமா் ஷெகெரு இஷிபா ராஜிநாமா செய்தாா். புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. அதில் சனே தகாய்ச்சி வெற்றி பெற்றாா். தற்போது நாடாளுமன்ற கீழவையில் எல்டிபி கட்சி அதிக இடங்களைக் கைவசம் வைத்துள்ளதால், நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் தோ்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com