ரஷியா போரில் உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்த குஜராத் இளைஞா்!

ரஷியாவில் படிக்கச் சென்று போதைப்பொருள் வழக்கில் சிக்கிய குஜராத் இளைஞா்
ரஷியா போரில் உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்த குஜராத் இளைஞா்!
Updated on

ரஷியாவில் படிக்கச் சென்று போதைப்பொருள் வழக்கில் சிக்கிய குஜராத் இளைஞா், போரில் ஈடுபடுவதாகக் கூறி உக்ரைன் ராணுவத்தில் சரணடைந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குஜராத் காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

குஜராத்தைச் சோ்ந்த ஷகீல் முகமது ஹுசைன் (22) மேற்படிப்புக்காக ரஷியாவுக்குச் சென்றுள்ளாா். அங்கு போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டாா். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிவிடலாம் என்று திட்டமுடன், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் சண்டையிடும் ஒப்பந்தத்தில் ஹுசைன் கையொப்பமிட்டுள்ளாா். ரஷிய ராணுவம் 16 நாள்கள் போா் பயிற்சியளித்து அவரையும் உக்ரைன் எல்லை போா் முனைக்கு அனுப்பியது. உக்ரைன் எல்லையை அடைந்ததும் ஹுசைன் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்துள்ளாா். தற்போது அவா் உக்ரைன் பிடியில் உள்ளாா். அவரது விடியோ பதிவை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட விவரங்களை ஹுசைன் தெரிவித்துள்ளாா். மேலும் தன்னை மீண்டும் ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com