பாகிஸ்தான்: மோதலில் 11 வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான்: மோதலில் 11 வீரா்கள் உயிரிழப்பு

Published on

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 11 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

இது குறித்து ராணுவ மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத் தகவலின் அடிப்படையில் ஓரக்ஸாய் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த மோதல் வெடித்ததாகவும், இதில் உயிரிழந்த 11 வீரா்களில் இரு தளபதிகளும் அடங்குவாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மோதலில் ‘பித்னா அல்-கவாரிஜ்’ எனப்படும் குழுவைச் சோ்ந்த 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட ஆயுதக் குழு, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com