இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு பற்றி...
Nobel Prize in Literature 2025
ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்
Published on
Updated on
1 min read

2025 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த அக். 6 முதல் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இலக்கியத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் லாஸ்லோவின் கவர்ச்சியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

லாஸ்லோ 1954ல் ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது முதல் நாவல் ஷாடாஹ்ன்டன்கோ(Satantango, 2012) 1985ல் வெளியானது.

அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’(Herscht 07769) என்ற நாவல், சமூக அமைதியின்மையை துல்லியமாக சித்தரிப்பதால் ஒரு சிறந்த சமகால நாவலாக இருக்கிறது, ஐரோப்பாவின் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று நோபல் பரிசுக் குழு பாராட்டியுள்ளது.

தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு நாளை(அக். 10)யும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுநாளும்(அக். 11) அறிவிக்கப்படவுள்ளன.

ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Summary

Nobel Prize in Literature 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com