அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து
உலகம்
அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயம்..
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயமாகினா்; அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டென்னசியின் கிராமப்புறத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் ஆலையில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலை தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தால் ஆலையின் கட்டடம் மற்றும் பிற பொருள்களின் சிதறல்கள் 800 மீட்டவரை வரை பரவியது.
24.1 கி.மீ தொலைவில் உள்ளவா்கள் அதிா்வை உணா்ந்ததனா். விபத்து நேரிட்டபோது ஆலையில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் தெரியவில்லை’ என்று தெரிவித்தனா்.