
இஸ்ரேலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை இஸ்ரேல் ராணுவம் உறுதிசெய்துள்ளது.
இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் அமைப்பினா் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, எகிப்துடன் கத்தாரும் மத்தியஸ்தராக செயல்பட்ட நிலையில், 20 அம்சங்களுடன் கூடிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் முன்மொழிந்தாா். இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை ஏற்றுக் கொண்டு, எஞ்சியுள்ள பிணைக் கைதிகள்-சிறைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்தவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சில தினங்களுக்கு முன் ஒப்புக் கொண்டன.
அதன்படி, இஸ்ரேல் பிணைக்கைதிகளில் உயிருடன் உள்ளவர்களில் 7 பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 13 பேர் திங்கள்கிழமை(அக். 13) விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் தரப்பு ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட மக்களில், உயிருடன் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும்(20 பேர்) விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.