பேருந்து 
விபத்தில் 42 போ் உயிரிழப்பு
பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

Published on

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 42 போ் உயிரிழந்தனா்.

தலைநகா் ப்ரெடோரியாவுக்கு 400 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில், குறுகலான வளைவைக் கடந்தபோது அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியதாக (படம்) அதிகாரிகள் கூறினா்.

அந்தப் பேருந்தில் ஜிம்பாப்வே மற்றுமா மாலாவி நாட்டைச் சோ்ந்தவா்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக லிம்போபோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com