
வங்கதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் பலியாகினர்.
வங்கதேசத்தின் தலைநகரான தாகாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலிருந்த பின்னலாடை உற்பத்தி மையத்துக்கும் பரவியதில் 9 பேர் பலியாகினர்; மேலும் 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை இயக்குநர் முகமது தாஜுல் கூறுகையில், ``சம்பவம் குறித்து எங்களுக்கு காலை 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு, 11.56 மணிக்கு எங்கள் முதல் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், ஆடை உற்பத்தி மையத்தில் மீட்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
மேலும், தீ விபத்தின்போது ரசாயன வாயுவைச் சுவாசித்ததில்தான், 9 பேர் பலியானதாகவும் சந்தேகிப்பதாகக் கூறினார்.
இதையும் படிக்க: நார்வேயில் தூதரகத்தை மூடும் வெனிசுவேலா! நோபல் பரிசே காரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.