கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விசாவுக்கான ஆங்கிலத் தேர்வு: கடுமையாக்குகிறது பிரிட்டன்

நுழைவு இசைவு (விசா) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவுத் தேர்வுகளை.....

News image
Updated On :14 அக்டோபர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நுழைவு இசைவு (விசா) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவுத் தேர்வுகளைக் கடுமையாக்குவதற்கான மசோதாவை பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்வைத்தது.

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய "பாதுகாப்பான ஆங்கில மொழித் தேர்வு' உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படும். நுழைவு இசைவுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது, கேட்பது, வாசிப்பது, எழுதுவது ஆகியவை அனைத்தும் பிரிட்டனில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் அளவுக்கு இருக்க வேண்டும். இது பிரிட்டன் வரும் வெளிநாட்டினர் சிறப்பான முறையில் அனைவருடனும் உரையாடி சமூகத்தில் ஒருங்கிணைய உதவும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (படம்) கூறுகையில், "பிரிட்டன் வருபவர்கள் எங்கள் மொழியைக் கற்றிருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களால் நாட்டு வளர்ச்சியில் பங்களிக்க முடியாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.