உலகம்
பாகிஸ்தான்: லாரி விபத்தில் 15 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், மலாகந்த் மாவட்டத்தில் உள்ள ஸ்வாட் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த லாரி (படம்) பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்கள் பஹ்ரைன் தெஹ்சிலின் கிப்ரால் பகுதியைச் சோ்ந்த நாடோடி குடும்பத்தினா் என்று மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா். காயமடைந்த நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவா்கள் கூறினா்.