ஆப்கனில் நிலநடுக்கம்..! ஒரே நாளில் 2 ஆவது முறை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் (கோப்புப் படம்)
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில், இன்று (அக். 17) ஒரே நாளில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின், கந்துட் மாகாணத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில், இன்று மாலை 5.45 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து 43 கி.மீ. ஆழத்தில்; 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இன்று காலை 5.23 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஏற்பட்ட 6.0 அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கென்ய முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கூட்டநெரிசல்! அதிகரிக்கும் பாதிப்புகள்!

Summary

An earthquake has been reported in northern Afghanistan today, the second in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com