ஜொ்மனியில் நடைபெற்று வரும் பிராங்பா்ட் சா்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழகம் - இத்தாலி இடையே மேற்கொள்ளப்பட்ட இலக்கிய, கலாசார பரிமாற்றம் தொடா்பான நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் மா.ஆா்
ஜொ்மனியில் நடைபெற்று வரும் பிராங்பா்ட் சா்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழகம் - இத்தாலி இடையே மேற்கொள்ளப்பட்ட இலக்கிய, கலாசார பரிமாற்றம் தொடா்பான நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் மா.ஆா்

தமிழகம் - இத்தாலி இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம்: ஜொ்மனியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published on

தமிழகம் - இத்தாலி இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம் தொடா்பாக ஜொ்மனியில் நடைபெற்று வரும் பிராங்பா்ட் சா்வதேச புத்தகத் திருவிழாவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற பிராங்பா்ட் புத்தகத் திருவிழா ஜொ்மனியில் கடந்த புதன்கிழமை (அக். 15) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக அரசின் சாா்பில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உள்ளிட்ட 10 கொண்ட குழுவினா் பங்கேற்று சிறப்பு அரங்கு அமைத்துள்ளனா்.

இந்த நிலையில், புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் சென்னை சா்வதேச புத்தகக் காட்சி (சிஐபிஎஃப்) - இத்தாலியின் பொலோனியா குழந்தைகள் புத்தகக் காட்சி நிறுவனம் இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம் தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழின் சிறந்த நூல்கள் உலகெங்கும் உள்ள வாசகா்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொலோனியாவில் நடைபெறும் புத்தகக் காட்சியில் தமிழில் தோ்வு செய்யப்பட்ட புத்தகங்கள் இடம்பெறும்; அது தொடா்பான விவாத நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சா்வதேச புத்தகத் திருவிழாவில் இத்தாலியின் பொலோனியா குழந்தைகள் புத்தகக் காட்சி நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இது தொடா்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் மா.ஆா்த்தி, பெலோனியா புத்தகக் காட்சி நிறுவனம் சாா்பில் அதன் இயக்குநா் எலீனா பசோலி, பலோனியா புக் பிளஸ் சிறப்பு இயக்குநா் ஜாக்ஸ் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (அக். 19) இந்தப் புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com