
காஸாவில் நிலவும் பஞ்சத்தைப் போக்குவதற்கு அந்தப் பகுதியில் மிகத் தாராளமாக உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புக்கான ஐ.நா. பிரிவான உலக உணவுத் திட்டம் (டபிள்யுஎஃப்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கொடும் பஞ்சத்தை போக்குவதற்கு சிறிது காலம் தேவைப்படும். உணவுப் பொருள்களால் காஸாவை நிரப்பினால்தான் அது சாத்தியமாகும். அதற்காக, காஸôவுக்குள் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் திறந்துவிட்டு, உணவுப் பொருள்கள் அந்தப் பகுதிக்கு தாராளமாகச் செல்ல இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, சுமார் 3,000 டன் உணவுப் பொருள்களை மட்டுமே அந்தப் பகுதிக்குள் கொண்டு செல்ல முடிந்தது.
பல மாதங்களாக முற்றுகை, இடம்பெயர்வு மற்றும் பசியை அனுபவித்த பொதுமக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருள்களைக் கொண்டு சேர்க்க டபிள்யுஎஃப்பி மிக வேகமாக செயல்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காஸாவின் தெற்குப் பகுதியில் மட்டும் ஐந்து உணவு விநியோக மையங்கள் இயங்கி வருகின்றன. இதை 145-ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக டபிள்யுஎஃப்பி அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.