காஸா மக்களைக் கொல்வதை நிறுத்தாவிட்டால்... ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

காஸாவில் மக்களைக் கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்ஏபி
Published on
Updated on
1 min read

காஸாவில் மக்களைக் கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர நடவடிக்கைக்குப் பின்னர், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான 2 ஆண்டு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினரும் ஒப்புக் கொண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, ஹமாஸ் வசம் உள்ள உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலும், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை அதிபர் டிரம்ப் கடுமையாக கண்டித்து, ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஹமாஸ் அமைப்பு காஸாவில் உள்ள மக்களைக் தொடர்ந்து கொன்று வந்தால், அது ஒப்பந்தம் அல்ல. நாங்கள் உள்ளே சென்று அவர்களைக்(ஹமாஸ் அமைப்பினர்) கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

US President Donald J Trump posts, "If Hamas continues to kill people in Gaza, which was not the deal, we will have no choice but to go in and kill them."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com