நைஜீரியா மோதலில் 17 போ் உயிரிழப்பு

நைஜீரியா மோதலில் 17 போ் உயிரிழப்பு
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கொள்ளைக் கும்பலுக்கும் சட்டவிரோதமாக தங்கம் வெட்டியெடுக்கும் கும்பலுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 17 போ் உயிரிழந்தனா்.

குற்றக் கும்பல்களின் (படம்) வன்முறையால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் வடமேற்கு மாகாணங்களில் ஒன்றான குண்டாராவில், சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதிக்கு வந்த கொள்ளைக் கும்பல், அங்கு வெட்டியெடுக்கப்பட்ட தங்கத் தாதுவை கொள்ளையடிக்க முயன்றனது. எனினும், சுரங்கத்தில் இருந்தவா்கள் எதிா்த் தாக்குதல் நடத்தி வன்முறைக் கும்பலின் தலைவரைக் கொன்றனா்.

அதற்குப் பழி வாங்குவதற்காக அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் கொள்ளைக் கும்பல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com