பாக். செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய சீனா!

‘லிஜியான்1 ஒய்8’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!
ராக்கெட்
ராக்கெட்கோப்பிலிருந்து படம் | ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

பீஜிங்: பாகிஸ்தான் செயற்கைக்கோளை சீனா விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ளதொரு விண்வெளி ஏவுதளத்திலிருந்து பாகிஸ்தானின் ரிமோட் சென்சிங் (பிஆர்எஸ்எஸ்-2) செயற்கைக்கோள் மற்றும் சீனாவின் ஏர்சாட் 03, 04 ஆகிய மூன்று செயற்கைக்கோள்கள், இன்று(அக். 19) ‘லிஜியான்1 ஒய்8’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இதன்மூலம், சீனா மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 3-ஆவது பாகிஸ்தானிய செயற்கைக்கோளாக பிஆர்எஸ்எஸ்-2 மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் பிஆர்எஸ்சி-இ01 செயற்கைக்கோளும் அதனைத்தொடர்ந்து கடந்த ஜூலையில் பிஆர்எஸ்எஸ்-1 செயற்கைக்கோளும் சீனாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுடன் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

China launches Pakistan's remote sensing satellite along with two of its own

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com