
இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக். 18) இஸ்ரேலிய தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
76 வயதை நெருங்கிவிட்ட நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக கடந்த 1996 - 1999, 2009 - 2021, 2022 முதல் இன்றுவரை பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் பிரதமர் பதவி வகிக்கும் நெதன்யாகு பதவிக் காலத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் ராணுவ தாக்குதல்களில் முக்கியமானதாக மாறியுள்ள காஸா போர் நெதன்யாகு தலைமையிலான அரசால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த சண்டைக்கு இஸ்ரேல் சமூகத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அமைதிப் பாதைக்கு திரும்ப வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் போராட்டமும் வெடித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் அமைப்பினா் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, எகிப்துடன் கத்தாரும் மத்தியஸ்தராக செயல்பட்ட நிலையில், 20 அம்சங்களுடன் கூடிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் முன்மொழிந்தாா். இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தை ஏற்றுக் கொண்டு, எஞ்சியுள்ள பிணைக் கைதிகள்-சிறைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்தவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சில தினங்களுக்கு முன் ஒப்புக் கொண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.