
ஹாங் காங்கில் தரையிரங்கும்போது ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் தரையிரங்கும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
துபையிலிருந்து சரக்குகளை ஏற்றிவந்த விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் காலை 3.50 மணிக்கு தரையிரங்கியுள்ளது.
விமான ஓடுதளத்தில் தரையிரங்கும்போது வழுக்கி, அருகில் இருந்த கடலில் விழுந்துள்ளது.
இந்த விமானத்தில் இருந்தவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக ஹாங் காங் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.