
காஸாவில் அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் உலகெங்கிலுமிருந்து காஸா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருள்கள் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
என்ன சொல்கிறது இஸ்ரேல்?
கடந்த அக். 10-இல் அமெரிக்காவின் தலையீட்டால் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை மீறியது இஸ்ரேல் அல்ல; ஹமாஸ்! ஹமாஸ் படையினரின் புதிய தாக்குதல்களில் இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கான பதிலடியாக ஞாயிற்றுக்கிழமை(அக். 19) இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை(அக். 19) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸாவில் நிலைமை மோசமாவதையடுத்து, அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு திங்கள்கிழமை(அக். 20) விரைந்துள்ளனர். இஸ்ரேலில் அவர்கள் காஸா அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்காமல் திட்டமிட்டபடி அமல்படுத்தி அமைதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.