
ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்தால் இந்தியாவுக்கு வரி தளர்வு இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் உத்தரவின்கீழ், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பதால் இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் இணக்கமின்றி அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அதிக வரி செலுத்துவதை இந்தியா நிச்சயம் தொட வேண்டியிருக்கும் என்று இந்தியாவை மிரட்டும் தொனியில் டிரம்ப் இப்போது பேசியிருப்பது சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், “ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்தால், அதிகப்படியான வரி செலுத்துவதை இந்தியா தொடர வேண்டியிருக்கும். ஆனால், அதனைச் செய்ய வேண்டாம் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி தன்னிடம் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யாது என்ற உத்தரவாதத்தை அளித்திருந்ததாக டிரம்ப் கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதே கருத்தை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், “இந்தியப் பிரதமருடன் நான் பேசினேன். அவர் ரஷிய எண்ணெய் விவகாரத்தை தொடரப் போவதில்லை என்று என்னிடம் தெரிவித்தார்” என்றும் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.