நேபாளத்தின் கல்வி நிலையங்களுக்கு சுமார் 81 பள்ளிப் பேருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
ஜென் - ஸி போராட்டம் மற்றும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டின் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக, இந்திய அரசின் சார்பில் 81 பள்ளிப் பேருந்துகள் வழங்கப்பட்டதாக, இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட இலம், ஜாபா, உதய்பூர் மற்றும் ஹம்லா, மஸ்தாங், சங்குவாசபா, தர்ச்சுலா, பைதாடி, அச்சம் உள்பட 48 மாவட்டங்களுக்கு இந்தப் பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுபற்றி, தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலைப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் கல்வி நிலையங்களைச் சென்றடைய இந்தப் பேருந்துகள் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தின் பல்வேறு கல்வி நிலையங்களுக்கு இந்திய அரசு சுமார் 381 பேருந்துகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மங்கோலியாவில் தொடரும் தட்டம்மை பரவல்! 13,500-ஐ கடந்த பாதிப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.