தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: நைஜீரிய ராணுவம்
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்ாக நைஜீரிய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
போா்னோ மாகாணத்தில் உள்ள டிக்வா, மாஃபா, கஜிபோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீதும், அருகிலுள்ள யோபே மாகாண ராணுவ நிலைகள் மீதும் பயங்கரவாதிகள் ஒருங்கிணைக்கந்த ட்ரோன் தாக்குதலை நடத்தினா். அவா்களுக்கு எதிராக போா் விமானங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். காயமடைந்துள்ள 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணி நடந்து வருகிற என்றாா் அவா்.
ஆப்பிரிக்காவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியா, போகோ ஹராம் மற்றும் பிற மதவாதக் குழுக்களின் வன்முறையால் 16 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவின் வடகிழக்கில் 40,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

