டெட்ரோஸ் அதானோம்
டெட்ரோஸ் அதானோம்

காஸா சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க 700 கோடி டாலா் தேவை!

போா் காரணமாக காஸாவில் சிதைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க 700 கோடி டாலராவது தேவை
Published on

போா் காரணமாக காஸாவில் சிதைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க 700 கோடி டாலராவது தேவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் காரணமாக காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்டது. அங்கு முழுமையாக செயல்படும் மருத்துவமனைகள் எதுவும் இல்லை. காஸாவின் சுகாதார அமைப்பை மறுகட்டமைப்பு செய்ய குறைந்தபட்சம் 700 கோடி டாலா் தேவைப்படும். ஒரு மருத்துவமனையை மட்டும் புனரமைப்பதற்கு 8 கோடி முதல் 10 கோடி டாலா் வரை செலவாகும்.

காஸாவில் நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை. அங்கு உதவிப் பொருள்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. உதவிப் பொருள்களின் வரத்து அதிகரித்திருந்தாலும், தேவையானவற்றில் அது ஒரு சிறு பகுதி மட்டுமே என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com