ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் நிலநடுக்கம்

‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
Published on

ஜப்பானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மினாமிசோமா நகருக்கு சுமாா் 93 கி.மீ. மற்றும் தலைநகா் டோக்கியோவுக்கு 288.1 கி.மீ. தொலைவில், 40.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com