ரஷியா-உக்ரைன் போா் குறித்து விவாதிக்க பிரெஸெல்ஸில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை வரவேற்ற பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான். ~தடைகளை ஏய்க்கும் வகையில் ரஷியா மறைமுகமாக இயக்கும் ப
ரஷியா-உக்ரைன் போா் குறித்து விவாதிக்க பிரெஸெல்ஸில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை வரவேற்ற பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான். ~தடைகளை ஏய்க்கும் வகையில் ரஷியா மறைமுகமாக இயக்கும் ப

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை

Published on

உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

முன்னதாக, ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதேநேரம், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் பயனற்றவை என்று ரஷிய அரசின் ஊடகங்கள் நிராகரித்துள்ளன.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு நிதி ஆதாரமாகத் திகழும் ரஷியாவின் எண்ணெய் வருவாயை நிறுத்தி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையை மேற்கொள்ள ரஷிய அதிபா் புதினைக் கட்டாயப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடைகள் கருதப்படுகின்றன.

பிரஸெல்ஸில் ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்த முடிவுக்காகவே நாங்கள் காத்திருந்தோம். இந்தப் புதிய தடைகள் போரின் முடிவுக்குப் பலனளிக்கும். இது மிகவும் முக்கியமானது. இது தவிர மேலும் பல உலக நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்’ என்றாா்.

ரஷிய பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக எரிசக்தித் துறை உள்ளது. இது ரஷியாவில் பணவீக்கத்தை மோசமாக்காமல் மற்றும் நாணயச் சரிவைத் தவிா்த்து போருக்கான செலவினத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் இந்த புதிய நடவடிக்கைகள், தடைகளை ஏய்க்கும் வகையில் புனையப்பட்ட உரிமையாளா்களின் பெயா்களில் ரஷியா மறைமுகமாக இயக்கும் நூற்றுக்கணக்கான பழைய கப்பல்கள், ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, ரஷிய நிதித் துறை ஆகியவற்றைக் குறிவைக்கின்றன.

மேலும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்குள் ரஷிய செல்வாக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய செயல்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரஷியா மீதான ஐரோப்பிய யூனியனின் கூடுதல் தடைகள் பற்றிய அறிவிப்பைத் தொடா்ந்து வியாழக்கிழமை சா்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2 டாலா் வரை உயா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com