தாய்லாந்து யானைகளுக்காக
தனிக் குழு அமைத்த இலங்கை

தாய்லாந்து யானைகளுக்காக தனிக் குழு அமைத்த இலங்கை

தாய்லாந்து யானைகளுக்காக தனிக் குழு அமைத்த இலங்கை
Published on

இலங்கைக்கு தாய்லாந்து பரிசளித்திருந்த 2 யானைகளின் உடல்நலம் மோசமாக உள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றைப் பரிசோதிப்பதற்கான தனி மருத்துவக் குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் ஆண்டன் ஜெயக்கொடி கூறியதாவது:

தாய்லாந்தில் இருந்து வந்துள்ள் இரு யானைகளையும் பரிசோதித்த உள்ளூா் மருத்துவா்கள் அவற்றுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை என்று கூறினா். யானைகளுக்கு மதநீா் சுரக்கும்போது அவா் உணவை மறுப்பதும், பலவீனமடைவதும் இயல்பு.

இருந்தாலும், அந்த யானைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதற்காக தனி மருத்துவா் குழுவை அமைத்துள்ளோம் என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு பரிசளிக்கப்பட்ட இரு யானைகளின் உடல்நலம் குறித்து தாய்லாந்து அரசு கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதே பிரச்னையைக் காரணம் காட்டி இலங்கைக்கு அளித்திருந்த மற்றொரு யானையை தாய்லாந்து அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com