

ரஷியாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா கடந்த 22-ஆம் தேதி பொருளாதார தடை விதித்தது. இதன்மூலம் இந்நிறுவனங்களுடன் அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்கா அல்லாத நிறுவனங்களும் மேற்கூறிய ரஷிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டால் அவற்றுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ள அமெரிக்கா, இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகத்தை நவ. 21-ஆம் தேதிக்குள் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்தது.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து போர் நடத்தி வருவதால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷியாவின் இந்த 2 நிறுவனங்கள் மட்டுமில்லாது, அந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரஷியாவுடன் போரை நிறுத்தினால் உக்ரைன் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ள அவர் லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா அழைத்ததன்பேரில் புதினின் உதவியாளர் கிரில் டிமிட்ரிவ் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.