காஸாவில் எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரம்!

எகிப்திலிருந்து நிபுணர் குழுவும் காஸா சென்றடைந்துள்ளது.
உருக்குலைந்த நிலையிலுள்ள காஸா சிட்டி
உருக்குலைந்த நிலையிலுள்ள காஸா சிட்டிAP
Published on
Updated on
1 min read

காஸாவில் எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ள காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அவர்களுள் இப்போது உயிரிழந்தவர்களின் உடல்களை, இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஹமாஸ் நிர்பந்தத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இதுவரை 18 பிணைக் கைதிகள் உடல்கள் ஹமாஸிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மறுபுறம் இஸ்ரேலிலிருந்து 195 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களை அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலக்கெடுவை சனிக்கிழமை(அக். 25) விதித்தார்.

இதையடுத்து, காஸாவில் அனைத்துப் பகுதிகளிலும் ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை(அக். 26) தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக எகிப்திலிருந்து நிபுணர் குழுவும் காஸா சென்றடைந்துள்ளது. அவர்கள் புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Hamas expanded its search for the bodies of hostages in new areas in the Gaza Strip Sunday, the Palestinian group said, a day after Egypt deployed a team of experts and heavy equipment to help retrieve the bodies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com