உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம்!

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சிறிய ரக பயணிகள் விமானம்: ரஷியாவுடன் எச்ஏஎல் ஒப்பந்தம்!
 ரஷியாவுடன் எச்ஏஎல் ஒப்பந்தம்
ரஷியாவுடன் எச்ஏஎல் ஒப்பந்தம்படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் விமான சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய ரகத்திலான விமானங்கள் அதிகம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரட்டை என்ஜின் கொண்ட குறுகிய வடிவமைப்புடன் திகழும் எஸ்ஜே-100 என்னும் சிறிய ரக விமானம் தயாரிக்க ரஷியா - இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த விமானங்கள் குறுகிய தூர பயணத்துக்கு ஏற்றவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடான் திட்டத்தின்கீழ் மேற்கண்ட எஸ்ஜே-100 விமானம் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (எச்ஏஎல்) நிறுவனம் ரஷியாவின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசனுடன்(பிஜேஎஸ்சி - யுஏசி) ஒப்பந்தம் போட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் மாஸ்கோவில் திங்கள்கிழமை(அக். 27) கையெழுத்தானது. இந்தியாவில் இத்தகையதொரு பயணிகள் விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Summary

India and Russia have firmed up a joint collaboration to produce a twin-engine narrow-body passenger aircraft for short-haul flights in line with growing strategic ties between the two countries. State-run aerospace major Hindustan Aeronautics Ltd (HAL) reached an agreement with Russia's Public Joint Stock Company United Aircraft Corporation (PJSC-UAC) for production of SJ-100 aircraft.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com