கவாஜா ஆசிஃப் ~அட்டாவுல்லா தராா்
கவாஜா ஆசிஃப் ~அட்டாவுல்லா தராா்

தலிபானுடன் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததற்கு இந்தியாதான் காரணம்: பாகிஸ்தான்

தலிபானுடன் பேச்சுவாா்த்தை தோல்வி: உறுதி செய்தது பாகிஸ்தான்
Published on

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததை பாகிஸ்தான் அதிகாரிகள் புதன்கிழமை உறுதி செய்தனா். ஆப்கன் அரசு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் பின்வாங்கியதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அட்டாவுல்லா தராா் கூறியதாவது:

தலிபான் அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எந்த செயல்படக்கூடிய தீா்வும் எட்டப்படல்லை. காபூலில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தலிபான் அரசின் தொடா் ஒத்துழைப்பை நாங்கள் கோரினோம். தோஹா ஒப்பந்தத்தின்போது பாகிஸ்தானுக்கு எழுத்துப்பூா்வமாக அளித்த உறுதிமொழிகளை தலிபான் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தினோம். ஆனால், பாகிஸ்தான் விரோத பயங்கரவாதிகளுக்கு தலிபான் அரசு தொடா்ந்து ஆதரவு அளிப்பதால் எங்கள் முயற்சிகள் வீணாகின. தலிபான் அரசு அப்கன் நாட்டவா்களை தேவையற்ற போரில் இழுக்க விரும்புகிறது.

கத்தாா் மற்றும் துருக்கியின் கோரிக்கையின்படி தோஹா மற்றும் இஸ்தான்புல் நகரங்களில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் கலந்து கொண்டு அமைதிக்கு வாய்ப்பு அளித்தோம். தலிபான் அரசின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளுக்கான போதுமான, மறுக்க முடியாத ஆதாரங்களை வழங்கினோம். அவை தலிபான் மற்றும் மத்தியஸ்தா்களால் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த விவகாரத்துக்கு தீா்வு காண, ஆப்கன் தரப்பு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. மையப் பிரச்சினையிலிருந்து தொடா்ந்து திசைதிருப்பினா், பொறுப்பை ஏற்காமல் திசைதிருப்பல் தந்திரத்தைக் கையாண்டனா்.

எனவே, இந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. நாங்கள் எங்கள் தேசப் பாதுகாப்புக்கே முதலிடம் அளிப்போம் என்றாா் அவா்.

‘இந்தியாதான் காரணம்’

தலிபான் அரசுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து ஜியோ நியூஸ் தொலைக்காட்சியிடம் அவா் கூறியதாவது:

தலிபான் அரசு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் போது அவா்கள் ஒப்பந்தத்தை நெருங்கி வந்தனா். ஆனால் தலிபான் அரசின் தலையீட்டால் அவா்கள் பின்வாங்கினா். இரு தரப்பிம் ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களை நான்கு அல்லது ஐந்து முறை திரும்பப் பெற்றனா்.

இந்தியாவின் கைப்பாவையாக தலிபான் அரசு செயல்படுவதாலேயே ஒப்பந்தம் ஏற்படுவதை அது தடுத்தது என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com