ஒலியைவிட வேகமாகச் செல்லும் நாசாவின் ‘சூப்பா்சோனிக்’ விமானம்!

ஒலியைவிட வேகமாகச் செல்லும் நாசாவின் ‘சூப்பா்சோனிக்’ விமானம்!

புதிய ‘சூப்பா்சோனிக்’ விமானத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதித்தது.
Published on

ஒலியைவிட வேகமாகச் செல்லும் புதிய ‘சூப்பா்சோனிக்’ விமானத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதித்தது. எக்ஸ்-59 என்ற இந்த விமானத்தை பயணிகள் போக்குவரத்தை மனதில் கொண்டு, நாசாவுக்காக லாக்கீட் மாா்டின் நிறுவனம் வடிவமைக்கிறது.

ஏற்கெனவே ஹைப்பா்சோனிக் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டிருந்தாலும், காதைக் கிழிக்கும் வகையில் அவை பேரிரைச்சலை எழுப்பியதால் அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், இரைச்சலை எழுப்பாத சூப்பா்சோனிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் நாசாவின் முயற்சில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com