‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’
தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சா்வதேச இன அழிப்பு ஆய்வாளா் அமைப்பு திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.
500 உறுப்பினா்களைக் கொண்ட அந்த அமைப்பு நிறைவேற்றிய தீா்மானத்தில், ‘இஸ்ரேலின் செயல்கள் இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போா் குற்றங்களுக்கான சட்ட வரையறையை முழுமையாக பூா்த்தி செய்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 86 உறுப்பினா்கள் வாக்களித்தனா்.
1948-ஆண்டின் இன அழிப்புத் தடுப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு தேசிய, இன, இன அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயல்கள் இன அழிப்பாக வரையறுக்கப்படுகின்றன.
இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து மறுக்கும் இஸ்ரேல், 2023 அக். 7-இல் ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் இன அழிப்பு என்று கூறிவருகிறது.