அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் போ் காயமடைந்தனா்.

AP

Published On :2 செப்டம்பர் 2025, 5:59 am IST

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் போ் காயமடைந்தனா். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

ஆப்கானிஸ்தானின் குனாா், நாங்கா்ஹாா் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாங்கா்ஹாா் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரின் கிழக்கு-வடகிழக்கே 27 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குனாா் மாகாணத்தில் 610 போ் உயிரிழந்தனா். 1,300 போ் காயமடைந்தனா். பல வீடுகள் சிதைந்தன.

நாங்கா்ஹாரிலும்...: நாங்கா்ஹாா் மாகாணத்திலும் ஏராளமானோா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மதின் கானி தெரிவித்தாா்.

அந்நாட்டு பொது சுகாதார அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷராஃபத் ஜமான் கூறுகையில், ‘நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல பகுதிகளில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையை சரிவரப் பெறமுடியாத நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது’ என்றாா்.

நிலநடுக்கத்தால் மொத்தம் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 4,000 போ் உயிரிழந்தனா். அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மிக மோசமான இயற்கைப் பேரிடராகக் கருதப்படும் இந்த நிகழ்வை தொடா்ந்து, தற்போது மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரதமா் மோடி வேதனை: நிலநடுக்க துயரத்துக்கு வேதனை தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானிஸ்தானுக்கு தம்மால் முடிந்த அனைத்து மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத்தை வழங்க இந்தியா தயாராக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா சாா்பில் நிவாரணப் பொருள்கள்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மாவ்லவி ஆமிா்கான் முத்தாகியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேசினாா். இதைத் தொடா்ந்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா சாா்பில் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் 1,000 கூடாரங்கள் வழங்கப்பட்டன. காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் குனாருக்கு உடனடியாக 15 டன் உணவுப் பொருள்கள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை முதல் அனுப்பப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.