
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் குனார், நாங்கர்ஹார் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரின் கிழக்கு-வடகிழக்கே 27 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் கிராமங்களைத் தரைமட்டமாக்கியது. பலர் இடிபாடுகளில் சிக்கினர். நாங்கர்ஹார் மாகாணத்திலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இரண்டு மாகாணங்களிலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யூசுப் ஹம்மாத் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.