மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!

மோடி - ஷி ஜின்பிங் இருவரும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் கடுமையாக தாக்கி பேசியுள்ளதைப் பற்றி...
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு அதிகப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது. இந்த ஒருதலைப்பட்ச வா்த்தக உறவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மீதான வரிகளைக் குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதனால், தில்லி - வாஷிங்டன் இடையிலான நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேசுகையில், “இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இது உக்ரைன் - ரஷியா இடையேயான போரை மேலும் தூண்டுகிறது.

சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூவரும் சந்தித்து பேசினர். இந்தக் கூட்டம் நீண்டகால கூட்டம் என நினைக்கிறேன். இது செயல்மிக்க கூட்டம் என்றும் நினைக்கிறேன்.

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு. அவர்களின் மதிப்புகள் ரஷியாவைவிட நமக்கும் சீனாவுக்கும் மிக தேவயானவை. மேலும், இவர்கள் மிகவும் மோசமான நடிகர்கள். இந்தியாவும், சீனாவும் ரஷியாவின் போர் எந்திரத்துக்கு எரிபொருள் ஊற்றி வருகின்றன.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வலுவான அடித்தளத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரண்டு பெரிய நாடுகள் இதற்கு விரைவில் தீர்வு காணும்” எனத் தெரிவித்தார்.

Summary

India a bad actor: Trump aide fumes over oil buys, calls SCO meet 'performative'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com